மதுரையில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று புதிதாக 85 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பேர் கரோனாவிலிருந்து மீண்டு தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை கரோனா தொற்றின் காரணமாக 15 ஆயிரத்து 963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்து 792 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 379 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது 792 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள், முகாம்கள் மற்றும் தங்களது வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து தரக்கோரிய வழக்கு: மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு!