மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம், மானாமதுரை, கமுதி, பரமக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு தனியார், அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் படிக்கட்டுகளிலும், பேருந்தின் உள்ளே கூட்ட நெருக்கடியில் நின்றும் பயணிக்கின்றனர்.
காற்றில் பறக்கவிடப்பட்ட தகுந்த இடைவெளி தற்போது தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பேருந்துகளில் 50 விழுக்காடு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும், பேருந்துகளில் நின்றுகொண்டு யாரும் பயணம் செய்யக் கூடாது என்பன போன்ற விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது.
காற்றில் பறக்கவிடப்பட்ட தகுந்த இடைவெளி ஆனால், மதுரையிலிருந்து திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, கமுதி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகளில் அளவுக்கு அதிகமாக பொது மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் பயணிக்கின்றனர்.
காற்றில் பறக்கவிடப்பட்ட தகுந்த இடைவெளி இதனால், கரோனா அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளது. எனவே, தமிழ்நாடு அரசும், போக்குவரத்துத் துறை அலுவலர்களும் விதிகளைப் பின்பற்றாமல் இயங்கும் அரசு, தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனைத் தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.