கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் மேலும் நான்கு பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் பெண்கள், அவர்கள் நான்கு பேரும் தற்போது மதுரை கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மதுரையில் 75 பேர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர்களில் 45 பேர் முழுவதுமாக குணமடைந்து சில நாள்களுக்கு முன்பு வீடு திரும்பினர். இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இன்றைய நிலவரப்படி 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு; சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் நிலை என்ன?