தமிழ்நாட்டில் நேற்று (ஆக.10) ஒரே நாளில் 5,914 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 815ஆக அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 104 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 10 ஆயிரத்து 750 பேர் முழுவதுமாக குணமடைந்த நிலையில், தற்போது 1,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 293 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.