ETV Bharat / state

வாழை இலை விலை வீழ்ச்சி: உழவர்களின் நிலை வேதனை - கரோனா பரவலின் 2வது அலை தீவிரம்

மதுரை: ஒரு கட்டு வாழை இலை குறைந்து ரூ.100-க்கு விற்பனையாவதால் உழவர்கள், வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வாழை இலை விலை வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை

author img

By

Published : Apr 21, 2021, 7:55 AM IST

கரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துவருவதால் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன.

தமிழ்நாட்டில் நேற்றுமுதல் (ஏப். 20) இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், திருமணம் உள்ளிட்ட விழாக்களில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், உணவகங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் எதிரொலியாக நேற்று வாழை இலை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

சுமார் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.1000 முதல் ரூ.1500 வரை கடந்த மாதம் விற்பனையானது. ஆனால் நேற்று மதுரை மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் ஒரு கட்டு வாழை இலை ரூ.100 என்ற அளவிலேயே விலை போனது.

மேலும் பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநில நகரங்களிலிருந்து வந்துள்ள வாழை இலை ஆர்டர்களும் ரத்தாகிவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் தங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறினர்.

இதே நிலைதான் வாழை இலை உழவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்துள்ள வாழைகளிலிருந்து இலைகளை அறுவடைசெய்து, கட்டுகளாக்கி சந்தைக்கு கொண்டுவந்து சேர்க்கும்வரை அதிகத் தொகை செலவிட வேண்டியிருக்கும்.

ஆனால், ரூ.100-க்குகூட இலைக்கட்டு விற்பனையாகாமல் தேங்கியிருப்பதால், தங்களால் மேற்கொண்டு இலை அறுவடைசெய்ய முடியாது எனவும், அதனால் தங்களுக்கு வேளாண்மையில் பெரும் இழப்பு ஏற்படும் எனவும் உழவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.