நித்யானந்தா கூறி வரும் கைலாசா நாட்டில் உணவகம் வைக்க அனுமதி கோரி மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல் அதிபர் குமார் என்பவர் சமூகவலைதளத்தில் நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைப் பார்த்த நித்யானந்தா, நேரலையில் உணவகம் முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மதுரை ஆட்சியரிடம் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் முத்துக்குமார் கூறியதாவது, "மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள டெம்பிள் சிட்டி உணவகம் அப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து, இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவதோடு, அரசால் தேடப்படும், பாலியல் வழக்கு குற்றவாளியான நித்யானந்தாவிற்கு ஆதரவாக டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் செயல்படுகிறார்.
இதனால், நித்யானந்தாவை நல்லவர் போல் காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனவே, டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் மீது உடனடியாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: இரண்டாவது தலைநகரம் குறித்து காலத்தின் தேவைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்’ - அமைச்சர் ஜெயக்குமார்