மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது.
ஆனால், தற்போது மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையை, இரண்டு கிலோமீட்டர் தொலைவில், 12 ஆயிரம் பேர் வசிக்கும் பைகாரா பகுதிக்கு மாற்றப்பட்டது. அதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆதலால், தனது கண்டனத்தைத் தெரிவித்து கட்சியிலிருந்து விலகுவதாக மதுரை முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். மேலும், தனிப்பட்ட முறையில் மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்றுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!