ETV Bharat / state

'கோவை ஆயுதப்படை போலீசார் ஊர்வலம் வழக்கு: கமிஷனர் பிறப்பித்த உத்தரவு சரியானது' - கோயம்புத்தூர் ஆயுதப்படை காவலர்கள்

மதுரை: கோயம்புத்தூர் ஆயுதப்படை காவலர்கள் ஊர்வலம் சென்ற சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்களுக்கு 2 ஆண்டு ஊதிய உயர்வை ரத்து செய்ய போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு சரியானது என்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை
author img

By

Published : Sep 13, 2020, 2:42 AM IST

கோயம்புத்தூர் ஆயுதப்படை காவலர்கள் பலருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு வந்தது. இதன்படி, மாறுதல் பெற்ற காவலர்களை
மொத்தமாக விடுவிக்கவில்லை. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி முதலில் 138 பேரை உயர் அலுவலர்கள் முதலில் விடுவித்தனர்.

இதை கண்டித்து ஆயுதப்படை காவலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாறுதல் பெற்ற அனைவரையும் உடனே விடுவிக்கவேண்டும் என்று ஆயுதப்படை துணை கமிஷனர் அலுவலகத்தில் கூக்குரலிட்டனர்.

பின்னர் கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நோக்கிய ஊர்வலம் சென்றனர். இந்த சம்பவம் அப்போது பெரும் சலசலப்பை உண்டாக்கியது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு எதிராக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் இவர்கள் மீதான குற்றச்சாடடு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வை ரத்து செய்து கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

இந்த ஊதிய உயர்வு ரத்து செய்யப்படுவதால், பிற்காலத்தில் இவர்களுக்கு பதவி உயர்வு பெறுவதிலும் காலதாமதம் ஆகும்.

இந்த தண்டனையை எதிர்த்து, தற்போது மதுரை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் மாரிமுத்து என்ற காவலர், அப்போது கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே. விஸ்வநாதனிடம் முறையிட்டார்.

அதற்கு போலீஸ் கமிஷனர், 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ரத்து என்று தண்டனையை குறைத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து மதுரை கிளையில் மாரிமுத்து வழக்கு தொடர்ந்தார்.

போலீஸ் கமிஷனர் தன் மனதை செலுத்தாமல் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாகவும், ஊர்வலத்தில் தான் பங்கேற்றதற்கான ஆதாரம் இல்லை என்றும் எனவே உயர் அலுவலர்களின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த தீர்ப்பில், இடமாறுதல் பெற்ற ஆயுதப்படை காவலர்களில் பலர், வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு, சிறை கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்ததால், அவர்களை உடனே பணியில் இருந்து உயர் அலுவலர்கள் விடுவிக்கவில்லை. முதலில் 138 பேரை விடுவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயுதப்படை காவலர்கள் கூச்சலிட்டு, ஊர்வலம் சென்றுள்ளனர். ஆவணங்களை பார்க்கும்போது, நடந்த சம்பவம் குறித்து சக காவலர்கள் அளித்த வாக்குமூலத்தில் மனுதாரரும் இதில் பங்கேற்றார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை ஒழுக்க விதிகளின்படி, காவலர்கள் வேலை நிறுத்தம் அல்லது அதுபோன்ற (போராட்டம்) நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.

மனுதாரர் வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்படியிருந்தும், போலீஸ் கமிஷனர் கனிவாக பரிசீலித்து, 2 ஆண்டுகளுக்கு மட்டும் ஊதிய உயர்வை ரத்து செய்துள்ளார்.

மனுதாருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சட்டவிரோதம் இல்லை. எனவே, அப்போதைய கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் உத்தரவு சரியானது. அதை உறுதி செய்து, வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.