ETV Bharat / state

காலா திரைப்பட பாணியில் தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம் - மதுரை மாநகரில் டன் கணக்கில் குப்பைகள் தேக்கம் - தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற போராட்டம்

மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நகரில் டன் கணக்கில் குப்பைகள் தேங்கியுள்ளன.

காலா திரைப்பட பாணியில் தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம் - மதுரை மாநகரில் டன் கணக்கில் குப்பைகள் தேக்கம்

author img

By

Published : May 31, 2022, 10:13 AM IST

மதுரை, மாநகராட்சியில் பணியாற்றும் 4,500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மதுரை மேலவாசல் குடியிருப்பு பகுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தாங்களாகவே உணவு சமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7ஆவது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், கரோனா நிவாரண தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலா திரைப்பட பாணியில் தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம் - மதுரை மாநகரில் டன் கணக்கில் குப்பைகள் தேக்கம்

இதன் காரணமாக மாநகரில் சுமார் 350 டன் குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளனர். சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்பாக வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை, மாநகராட்சி சிறப்பு குழு மற்றும் மேயர் என 3 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் - நீதிமன்றத்தில் வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.