மதுரை:Clash between Prisoners: மதுரையில் இயங்கி வரும் மத்திய சிறைச்சாலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி கைதிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது சிறையின் வெளிச் சுவர் மீது ஏறிய கைதிகள் கற்களை எறிந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அதே பாணியில் இன்று (டிசம்பர் 29) மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது சிறைச்சாலையின் சுவற்றின் மீது ஏறிய கைதிகள் வெளிப்புறத்தில் கற்களை வீசியும், பிளேடால் உடலைக் கீறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த மோதலை காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
அங்கு ஏற்கெனவே சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பழைய சிறைவாசிகளுக்கும், அண்மையில் திருச்சியில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட சிறைக்கைதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கைதிகளின் போராட்டத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறைச்சாலை அருகே போக்குவரத்து நிறுத்தப்பட்டு காவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கைதிகளுக்கிடையே ஏற்பட்ட திடீர் மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: Diamond smuggling: அயன் பட பாணியில் கடத்தப்பட்ட வைரக்கற்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்