ETV Bharat / state

குட்டையில் மூழ்கிய சிறுவர்கள் உயிரிழப்பு! - சிறுவர்கள் உயிரிழப்பு

மதுரை: வண்டியூர் அருகே வைகை ஆற்றின் கரையோரம் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.

குட்டையில் மூழ்கிய சிறுவர்கள் உயிரிழப்பு

author img

By

Published : Feb 9, 2021, 12:34 PM IST

மதுரை மாவட்டம் சௌராஷ்டிராபுரம் பகுதி பாலாஜி நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்தவர் சேட்டுக்கனி. இவரது மகன் ரியாஸ் (10). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிமின் என்பரது மகள் பர்வீதா பீவீ, ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

இருவரும் நேற்று (பிப்.08) வண்டியூர் பகுதியிலுள்ள கொங்கு மண்டபம் அருகில் வைகை ஆற்றங்கரை ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ரியாஸ் திடீரென ஆற்றிலுள்ள குட்டையில் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற முயற்சித்த பர்வீதா பீவீயும் தவறி குட்டையில் விழுந்தார். இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர், அங்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர், இருவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குளத்தில் நீரில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.