ETV Bharat / state

டாஸ்மாக்கை மூடினால் வருவாய்க்கு வேறு என்ன திட்டம் இருக்கிறது - நீதிபதிகள் கேள்வி

மதுரை: டாஸ்மாக்கை மூடினால் வரும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

author img

By

Published : Apr 8, 2019, 7:35 PM IST

-madurai-high-court

தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், டாஸ்மாக் அமையவுள்ள இடத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளியும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன.

இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் இடையூறாக இருக்கிறது. ஆகவே, பள்ளி, அக்ரஹாரம், பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் பிரபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்விடம் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசு தரப்பிலிருந்து உரிய பதில் அளிக்க வேண்டும். டாஸ்மாக்கை மூடினால் வரும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய வரிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு இவ்வழக்கை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Intro:டாஸ்மாக்கை மூடினால் வரும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய வரிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Body:தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார் அதில் தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது விதிப்படி டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்திற்கு 100 மீட்டருக்குள் கோவிலோ கல்வி நிறுவனங்களில் இருக்கக்கூடாது ஆனால் பள்ளி அக்ரஹாரத்தில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் அருகே பேருந்து நிலையம் மாநகராட்சி அரசு பள்ளியில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெருமாள் கோவிலும் அமைந்துள்ளன இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்கள் மாணவர்கள் பயணிகள் வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் இடையூறாக அமையும்

ஆகவே பள்ளி அக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார் அதேபோல டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் பிரபாகரன் எஸ் எஸ் சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது அதில் கடந்த 2014ஆம் ஆண்டு 500 கடைகளும் 2017-ம் ஆண்டு 500 கடைகளும் மூடப்பட்டுள்ளன உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன இதுவரை 1500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன

2004 ஆம் ஆண்டு 7896 டாஸ்மாக் கடைகள் இருந்தன மார்ச் 2011 நிலவரப்படி 6 ஆயிரத்து 715 டாஸ்மாக் கடைகள் இருந்தன தற்போதைய நிலவரப்படி 5 ஆயிரத்து 239 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் உள்ளன டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது

இதையடுத்து நீதிபதிகள் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல தமிழக அரசு தரப்பிலேயே உரிய பதில் அளிக்க வேண்டும் டாஸ்மாக்கை மூடினால் வரும் வருவாய் இழப்பை ஈடு செய்ய வரிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்து அது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.