ETV Bharat / state

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே நாளை (டிச.24) முதல் ரயில் சேவைகள் ரத்து..முழு விவரம் உள்ளே! - திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில்கள் ரத்து

Tirunelveli Tiruchendur Train Cancel: செய்துங்கநல்லூர் முதல் ஸ்ரீ வைகுண்டம் வரையிலான ரயில் வழித்தடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும் காரணமாக டிசம்பர் 24 முதல் 31ம் தேதி வரை 8 ரயில் சேவைகள் முழு நேரமாகவும் 2 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே நாளை முதல் ரயில் சேவைகள் ரத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 9:45 PM IST

மதுரை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதனால் சாலைகள், குடியிருப்புகள், ரயில் பாதைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து சேதங்களை ஏற்படுத்தியது.

மேலும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள், விமானச் சேவைகள், சாலை போக்குவரத்துகள் என அனைத்தும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீ வைகுண்டம்- செய்துங்கநல்லூர் இடையே தண்டவாளத்தில் அடிப்பகுதி கடந்த வாரம் பெய்த மழையில் முழுவதுமாக வெள்ளத்தில் அடித்துச் சென்றது.

இந்நிலையில் செய்துங்கநல்லூர் முதல் ஸ்ரீ வைகுண்டம் வரையிலான ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதனால் நாளை (டிச.24) முதல் டிசம்பர் 31 வரையிலும் திருச்செந்தூர் - திருநெல்வேலி வழித்தடத்தில் செல்லும் 8 ரயில் சேவைகளும் அதே வழித்தடத்தில் செல்லும் 2 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை (டிச.24) முதல் டிசம்பர் 31 தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:

எண்வண்டி எண் வழித்தடம்புறப்படும் நேரம்
1 06673 திருநெல்வேலி -திருச்செந்தூர் (முன்பதிவு இல்லா ரயில்) காலை 7.25
2 06405 திருச்செந்தூர் - திருநெல்வேலி (முன்பதிவு இல்லா ரயில்) காலை 7.20
3 06674 திருச்செந்தூர் - திருநெல்வேலி (முன்பதிவு இல்லா ரயில்) காலை 8.15
4 06675 திருநெல்வேலி -திருச்செந்தூர் (முன்பதிவு இல்லா ரயில்) காலை 10.10
5 06409 திருநெல்வேலி -திருச்செந்தூர் (முன்பதிவு இல்லா ரயில்) மாலை 4.30
6 06676 திருச்செந்தூர் - திருநெல்வேலி (முன்பதிவு இல்லா ரயில்) மாலை 4.25
7 06677 திருநெல்வேலி -திருச்செந்தூர் (முன்பதிவு இல்லா ரயில்) மாலை 6.50
8 06678 திருச்செந்தூர் - திருநெல்வேலி (முன்பதிவு இல்லா ரயில்) மாலை 6.15

பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:

1. வாஞ்சி மணியாச்சியில் இருந்து காலை 11.05க்கு புறப்படும் வாஞ்சி மணியாச்சி திருச்செந்தூர் ரயில் (முன்பதிவு இல்லா ரயில் - 06679) திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் வழித்தடத்தில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

2. திருச்செந்தூரிலிருந்து மதியம் 2.30க்கு புறப்படும் திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி ரயில் (முன்பதிவு இல்லா ரயில் - 06680) திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி வழித்தடத்தில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் தினத்தன்று கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாகச் சென்னைக்குச் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.