ETV Bharat / state

சாத்தான்குளம் விவகாரம் - சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் - சாத்தான்குளம் விவகாரம்

cbi-filed-charge-sheet-against-sathankulam-lockup-twin-murder

author img

By

Published : Sep 26, 2020, 3:34 PM IST

Updated : Sep 26, 2020, 6:22 PM IST

15:31 September 26

மதுரை: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்து, தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், மத்திய குற்றப் புலனாய்வு (சிபிஐ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் காவல்துறையின் சித்திரவதையால் உயிரிழந்த தந்தை, மகன் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள 9 காவல்துறையினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. 

குற்றப்பத்திரிக்கையில், ஜெயராஜ், பென்னிக்ஸ்  ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சோ்ந்த வியாபாரி ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (35)  காவல் துறையினரின் தாக்குதலால் மரணமடைந்தது தொடா்பாக, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். 

கடந்த வாரம் சிபிஐ அலுவலர்கள் சாத்தான்குளம் வந்து, பென்னிக்ஸ் கடை அருகேயுள்ள கடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், அவரது வீட்டருகே உள்ள உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும், இவ்வழக்கில் சாட்சியாக சோ்க்கப்பட்டுள்ள வழக்குரைஞா் மணிமாறன் அலுவலகத்துக்கு, 10 பேரை நேரில் வரவழைத்து சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினா்.  

இந்நிலையில், இன்று(செப்டம்பர் 26) வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கை தானாக முன் வந்து நடத்தி வரும் உயா் நீதிமன்ற மதுரை கிளை, சிபிஐயிடம் எப்போது இவ்வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் என கேள்வி எழுப்பியது. மேலும், இதுதொடா்பாக செப்.30ஆம் தேதிக்குள் சிபிஐ பதில் அளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பென்னிக்ஸை தேடியலைந்த அவரது வளர்ப்பு நாய் - காண்போரை நெகிழ வைத்த காட்சி

Last Updated : Sep 26, 2020, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.