மதுரை: திருச்சி துறையூரைச் சேர்ந்த குருநாதன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "அரசு அலுவலர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால், லோக்ஆயுக்தா சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது.
ஆனால் தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டிலேயே லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டுவந்தது. அதன் விதிகளின்படி, முதலமைச்சர் மீது விசாரணை மேற்கொள்ள முடியாது. இதேபோல பல விதிகள் இதில் இடம்பெறவில்லை.
இது ஒன்றிய அரசின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்ட விதிகளுக்கு எதிரானது. ஆகவே தமிழ்நாடு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு விதிகளுக்கு உட்பட்டு புதிய சட்டத்தை இயற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளி சங்கர் அமர்வு வழக்கு குறித்து முதன்மைச் செயலர், சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: டெல்லியில் அமித் ஷா, அமரீந்தர் சிங் சந்திப்பு!