2013ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசும்போது, அப்போதைய தமிழ்நாடு முதலைமைச்சர் ஜெயலலிதாவையும் அரசையும் விமர்சித்ததாகக் கூறி திண்டுக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரி ஸ்டாலின் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், ஸ்டாலின் வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை - குற்றவாளிகளான இரு ஆசிரியர்கள்