மதுரை: நடிகர் சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்திற்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக அலுவலர்கள் தங்களுக்குத் தேவையான சலுகைகளை நேரடியாக வழங்கி வருவதாக, நாடோடி பழங்குடியினர் தெரிவித்தனர்.
இதற்காக முதலமைச்சருக்கும் சூர்யாவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பாம்பு, எலி மற்றும் பூம்பூம் மாடு உள்ளிட்ட உயிரினங்களோடு நாடோடி பழங்குடியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வந்து முழக்கம் எழுப்பி, நன்றி தெரிவித்தனர்.
நாடோடி பழங்குடிகள் மீது வழக்குப்பதிவு
இதன் காரணமாக இதில் பங்கேற்ற 21 பெண்கள் உள்பட 51 பேர் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு(Case filed against Tribes) செய்துள்ளனர்.
நன்றி தெரிவிக்கும்நிகழ்வில் தமிழக நாடோடிகள் பழங்குடி கூட்டமைப்பின் நிறுவனர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: Nilgiris leopard: நீலகிரியில் இரவில் உலாவும் சிறுத்தைகள்- மக்கள் அதிர்ச்சி