மதுரை மாவட்டம் சுற்றுச்சாலை அருகே அண்ணாநகர் காவல் துறையினர், இன்று (அக். 23) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இன்னோவா கார் ஒன்றை மடக்கிய காவல் துறையினர் அதனை சோதனை செய்தனர்.
சோதனையில், காரின் பின் சீட்டில் 215 கிலோ 200 கிராம் அளவுகொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையாடுத்து, கார் ஓட்டுநர் ராபர்ட் விக்டர் (24) என்பவரிடம் விசாரணை நடத்தியதில், விசாகப்பட்டினத்திலிருந்து கேரளாவுக்கு மதுரை வழியாக கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்தது.
பின்னர், கார் ஓட்டுநர் ராபர்ட் விக்டரை கைதுசெய்த காவல் துறையினர், இந்தக் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.