மதுரை அருகேயுள்ள ஹரிசன காலனி பகுதியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் தனது வீட்டிற்கு பக்கத்து வீட்டு பெண்ணான பாரதி என்பவரை காதலித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இதையறிந்த இரு வீட்டாரும் நேற்று முழுவதும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, ஒரு தரப்பினர் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இரு வீட்டார் இடையே ஏற்பட்ட பிரச்னையில், தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.