மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது பொதும்பு கிராமம். இங்கு, கலியுகமெய் அய்யனார் சுவாமி திருக்கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எருது கட்டு திருவிழா நடைபெறும்.
![Bullfighting festival in violation of the ban Police registered a case at madurai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-bull-fight-alanganallur-script-7208110_18122020134642_1812f_1608279402_62.png)
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 17) எவ்வித உரிய அனுமதியும் பெறாமல் எருது கட்டு விழாவினை வெகு சிறப்பாக அக்கிராம மக்கள் நடத்தினர். இதில், மொத்தம் 14 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கரோனா வழிகாட்டு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டனர்.
![Bullfighting festival in violation of the ban Police registered a case at madurai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-bull-fight-alanganallur-script-7208110_18122020134642_1812f_1608279402_562.png)
இதற்கிடையில், தடையை மீறி எருது கட்டு விழா நடத்தியதாக விழா கமிட்டியைச் சேர்ந்த நிர்வாகிகள் 12 பேர் மீது தடையை மீறி விழா நடத்தியது, நோய் பரப்பும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அலங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2021-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த கோரிக்கை மனு!