ETV Bharat / state

அமைச்சர் காரை சுத்து போட்ட அவனியாபுரம் காளை உரிமையாளர்கள்.. மதுரையில் நடந்தது என்ன? - பத்திர பதிவுத்துறை அமைச்சர்மூர்த்தி

Jallikattu: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு டோக்கன் வழங்கவில்லை எனக் கூறி, இளைஞர்கள் சிலர் அமைச்சர் மூர்த்தி கார் முன்பு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Avaniyapuram Minister Car -besieged-m
அமைச்சர் மூர்த்தியின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 10:59 PM IST

Updated : Jan 15, 2024, 6:42 AM IST

மதுரை: மதுரை மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை முதல் துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. நாளை காலை அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி பாலமேட்டிலும், மூன்றாவது போட்டி அலங்காநல்லூரிலும் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் கடந்த பத்தாம் தேதி ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து இன்று மதியம் அவனியாபுரம் போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு வேலைகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்வதற்காக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி உள்ளிட்டோர் நேரில் வந்திருந்தனர்.

அப்போது அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் 200க்கும் மேற்பட்டோர். உள்ளூரில் உள்ள யாருக்கும் டோக்கன் கிடைக்கவில்லை என அமைச்சரின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா மற்றும் மேயர் இந்திராணி பொன் வசந்த் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அமீர் மஹால் முதல் தேன்கனிக்கோட்டை வரை.. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்!

Last Updated : Jan 15, 2024, 6:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.