ETV Bharat / state

மதுரையில் கட்டிடம் இடிந்து விபத்து - மூவர் உயிரிழப்பு - madurai district news in tamil

மதுரை மாநகர் மேல வடம்போக்கி தெருவில் உள்ள பழைய கட்டடம் ஒன்று மராமத்து பணியின்போது இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

building collapsed in madurai three were died
மதுரையில் கட்டிடம் இடிந்து விபத்து - மூவர் பலி
author img

By

Published : Feb 1, 2021, 3:43 PM IST

மதுரை: மதுரை மேலமாசி வீதி அருகே உள்ள மேல வடம்போக்கி தெருவில் அமைந்துள்ள 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் ஒன்றில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், திடீரென அக்கட்டடம் சரிந்து கீழே விழுந்தது. அப்போது, அதன் உள்ளிருந்த ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கிய நால்வரில் சந்திரன், ராமன், ஜெயராமன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் எஞ்சியுள்ள மூன்று பேரை படு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரையில் கடன் கொடுத்தவர் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.