மதுரை: மதுரையைச் சேர்ந்த பாலு, உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுவில், 'நாங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட Bsc (கம்யூனிகேஷன் ஹெல்த்) என்ற மருத்துவப் படிப்பு படித்து முடித்துள்ளோம். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் (The Tamilnadu Medical Coucil) சங்கத்தில், எங்களது படிப்பைப் பதிவு செய்யக்கோரி விண்ணப்பித்தோம். ஆனால், மருத்துவ கவுன்சில் எங்கள் கோரிக்கையை நிராகரித்து உள்ளது.
எனவே, மருத்துவ கவுன்சில் நிராகரித்த கோரிக்கையை ரத்து செய்து, எங்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், மனுதாரர்கள் பிஎஸ்சி கம்யூனிகேஷன் ஹெல்த் என்ற படிப்பை படித்து முடித்துவிட்டு, மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய கூறுவது ஏற்கத்தக்கதல்ல என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.