ETV Bharat / state

விவேக் வழியில் வருங்காலத்தைக் காக்கும் புதுமண தம்பதி - vivek plantation

மதுரை: திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி இணைந்து விவேக்கை நினைவுகூர்ந்து 100 மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுமண தம்பதி
புதுமண தம்பதி
author img

By

Published : Jun 22, 2021, 1:48 PM IST

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். விவேக் மறைந்தாலும், அவர் நட்டுவைத்த மரங்கள் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் பலரும் விவேக் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச்சென்ற மரம் நடும் பணியைத் தீவிரமாகச் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சக்தி - நலந்த் குமார் தம்பதிக்கு நேற்று (ஜூன் 21) திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் முடிந்த கையோடு அங்குள்ள பாண்டி கோயில் அருகே அமைந்துள்ள நான்கு வழிச்சாலையில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

வருங்காலத்தைக் காக்கும் புதுமண தம்பதி

மறைந்த விவேக்கின் வழியில், மரக்கன்றுகளை நட்டுவைத்து அவரை நினைவுகூர்ந்து தங்களது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக அத்தம்பதியினர் தெரிவித்தனர்.

மேலும் கொய்யா மரம், வேப்பமரம், புளியமரம், நெல்லிமரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை அவர்கள் நட்டுவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் பிறந்தநாள்: அன்னதானம் வழங்கிய ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.