மதுரை, பழங்காநத்தம், மஹாலட்சுமிபுரம் அருகே இன்று காலை திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. ரயில்வே தண்டவாளத்தின் அருகேயுள்ள குடியிருப்பில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, ரயில்வே போலீசார் மற்றும் சுப்பிரமணியபுரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர். வெடித்த பொருள் நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வெடித்ததா? என வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.