ETV Bharat / state

திமுக நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கிறது - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

author img

By

Published : Feb 16, 2021, 5:25 PM IST

மதுரை: புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து திமுக நவீன தீண்டாமையை கையில் எடுத்துள்ளது என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி

மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக- பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 25ஆம் தேதி கோவைக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். 21ஆம் தேதி சேலத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தருகிறார். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேட்டி

அதிமுக - பாஜக உறுதி செய்யப்பட்ட கூட்டணி. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினால் எப்போதும் ஆட்சி அமைக்க முடியாது. அவரது கனவு கனவாகவே மாறிவிடும் என்பதே உண்மை. புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து திமுக நவீன தீண்டாமையை கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான்.

ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் தோல்விதான் ஏற்படுகிறது. தலைசிறந்த ஆட்சியை தந்த ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்துவதில் தவறில்லை. வேளாண் சட்டத்தை எந்த விவசாயிகளும் எதிர்க்கவில்லை, விவசாயிகள் மோடியை தோழனாக பார்க்கின்றனர். கோ பேக் (go back) மோடி என்று கூறுவது கடுமையான கண்டனத்துக்குரியது. மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திமுகவினரும், தேசவிரோதிகளும் தான்" என்றார்.

இதையும் படிங்க: சசிகலா கைகாட்டிய எடப்பாடி பழனிசாமி... 4 மாதங்கள் டூ 4 வருடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.