பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியவை பின்வருமாறு:
"தமிழ்நாடு பாஜக சார்பில் விவசாயிகளை சந்தித்து வேளாண் திருத்த சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது.
விவசாய ஊக்க தொகை
இரண்டாம் கட்டமாக, விவசாய ஊக்கத் தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வங்கிகள் மூலம் நேரடியாக வழங்கபட உள்ளது. தமிழ்நாட்டில் திமுகவின் 'பந்த்' வெற்றி அடையவில்லை. திமுக ஆட்சியின்போது 42க்கும் மேற்பட்ட விவசாயிகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
திமுகவின் தேர்தல் அறிக்கை
விவசாயிகளுக்கு சாதகமாகும் வகையில் விளைபொருள்களை எந்தப் பகுதியிலும் விற்பனை செய்யலாம் என்று கடந்த 2016ஆம் ஆண்டு திமுக அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், தற்போது மு.க.ஸ்டாலின் வேறுவிதமாகப் பேசி வருகிறார். எஸ்.ரா.சற்குணம் பாதிரியார், இறைவனுக்கு தொண்டாற்றுவதை விடுத்து திமுக கூட்டங்களில் மோடியை ஒருமையில் பேசியதைக் கண்டிக்கிறேன். இதுகுறித்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்வேண்டும் இல்லை என்றால் பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.
முதலமைச்சர் வேட்பாளர்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும். கரோனாவிற்குப் பிறகு, பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் எந்த இடற்பாடுகளுமின்றி கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு இரண்டாயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட உள்ளதை வரவேற்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: மத்திய அரசு நல்லது செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்பதே கமல் ஹாசனின் எண்ணம் - எல். முருகன் சாடல்