சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்துவருகின்றன.
கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கால் அகழாய்வு பணிகள் நடைபெறாமல் முடங்கியிருந்தது. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மே மூன்றாவது வாரம் முதல் கீழடியில் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இந்த முறை கீழடி மட்டுமன்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடக்கின்றன.
கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வில் ஆறடிக்கு தோண்டப்பட்ட குழி ஒன்றில் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு உதவி புரியும் காளை மாடு போன்ற ஏதேனும் ஒரு விலங்குடைய எலும்புக்கூடாக இது இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இருப்பினும் மூலக்கூறு ஆய்விற்குப் பிறகே இது எந்த மாதிரியான எலும்புக்கூடு என்பதை உறுதியாக் கூறமுடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹைடெக் முறையில் தீர்வுகாணவே விரும்புகிறோம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்