ETV Bharat / state

குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கு - பிணை மனு தள்ளுபடி

மதுரையில் சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் இதயம் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமாரின் உதவியாளர் மதார்ஷா அளித்த ஜாமீன் மனுவை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கு  சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை  மதுரையில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை  குழந்தைகள் விற்பனை  நீதிபதி  illegal adoptation  madurai court  madras high court madurai bench  high court madurai bench  high court  madurai child illegal adaptation  ஜாமீன் மனு தள்ளுபடி  Bail petition dismissed  child illegal adaptation Bail petition dismissed
madras high court madurai bench
author img

By

Published : Sep 16, 2021, 7:00 PM IST

மதுரை: ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டது. இக்காப்பகத்தில் ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் காப்பகத்தில் இருந்த இரண்டு குழந்தைகளை கரோனா தொற்றில் இறந்ததாகக் கூறி, வெளி நபர்களுக்கு விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

இது தொடர்பாக காப்பகத்தின் நிறுவனர் சிவக்குமார், உதவியாளர் மதார்ஷா, ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட ஏழு பேரை தல்லாகுளம் காவல் துறையினர் கைது செய்தனர்.

மனு தள்ளுபடி

இவ்வழக்கில் கைதான காப்பகத்தின் நிறுவனர் சிவக்குமார், முன்னதாக பிணை கோரி மனு அளித்திருந்தார். அதனை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் சிவக்குமாரின் உதவியாளராக பணிபுரிந்த மதர்ஷா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார். இம் மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஆணவங்களை முறைகேடாக தயார் செய்து குழந்தைகளை விற்பனை செய்வதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளதாக கூறி, பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.