ETV Bharat / state

மதுரையில் குழந்தைகள் விற்பனை வழக்கு - காப்பகத்தின் உதவியாளருக்குப் பிணை - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில், காப்பகத்தின் உதவியாளர் மதர் ஷாவுக்குப் பிணை வழங்கி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் சட்டவிரோத குழந்தை விற்பனை வழக்கு

author img

By

Published : Oct 4, 2021, 4:52 PM IST

மதுரை: ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தை அதன் நிறுவனர் சிவகுமார், உதவியாளர் மதர்ஷா மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் கரோனா தொற்று காலத்தின்போது, இரண்டு குழந்தைகளை வேறு நபர்களுக்கு விற்பனை செய்த வழக்கில் சிவகுமார், மதர்ஷா உள்ளிட்ட 7 பேரை தல்லாகுளம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரையில் குழந்தைகள் விற்பனை வழக்கு

இந்த வழக்கில் காப்பகத்தின் உதவியாளர் மதர்ஷா பிணைகோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

காப்பகத்தின் உதவியாளருக்குப் பிணை

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, குற்றவாளி கைது செய்து 92 நாட்களாகியும் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் மனுதாரருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: திருக்கோயில்களில் ஓரிரு நாள்களில் சிற்றுண்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.