ETV Bharat / state

விடுதலை மனு- முதல்வருக்கே தெரியாமல் நிராகரிப்பா?

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரித்து வரும் வழக்கு ஒன்றில, விடுதலை தொடர்பான பரிந்துரையை தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அதிகாரிகளே நிராகரிப்பு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mathurai
madurai
author img

By

Published : May 11, 2022, 7:16 PM IST

நெல்லையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை செய்திருந்தார். அதில்
சகோதரர் தங்க பெருமாள் தனது ஆண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அரசாணைப்படி சகோதரரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை அதிகாரிகள் நிராகரித்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதில் மனுதாரரின் சகோதரரை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே அதிகாரிகள், 2018ம் ஆண்டின் முதல்வர் அலுவலக சுற்றறிக்கை அடிப்படையில் நிராகரிப்பு செய்ததை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து நிராகரிப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டு , இந்த வழக்கில் பரிந்துரை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டுல இருக்குற பாதி நீதிமன்றங்கள் நீரில் தான் கட்டப்பட்டுள்ளன' - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.