மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் இரண்டாவது முறையாக இன்று நடைபெற்றது. அதில் அதிமுக கவுன்சிலர்கள் ஏழு பேரும், திமுக கவுன்சிலர்கள் ஆறு பேரும் பங்கேற்றனர்.
அதையடுத்து கூட்டத்தில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் மகாலெட்சுமி ராஜேஸ்கண்ணா 106 தீர்மானங்கள் கொண்டுவந்தார். அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக அதிமுக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வெளியேறினர்.
அதனால் திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து திமுக கவுன்சிலர் பசும்பொன்மாறன், தீர்மான புத்தகத்தைப் பறித்துக்கொண்டு அலுவலக கதவை இழுத்து மூடினார்.
அதையடுத்து அவர், திமுகவின் கருத்தை கேட்காமல் தீர்மானத்தில் கையெழுத்து போட சொல்வது முறையல்ல என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: தடையை மீறி கள் இறக்கிய திமுக கவுன்சிலர் கைது!