ETV Bharat / state

மதுரையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - வெளியான அதிர்ச்சி தகவல் - மதுரையில் பெண்கள் பாதுகாப்பு

மதுரை மாநகரில் கடந்த 34 மாதங்களில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிராக 406 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக மாநகர காவல் துறை அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா.. பெண் குழந்தைகளுக்கு எதிரான‌ பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

author img

By

Published : Dec 19, 2022, 5:43 PM IST

மதுரை மாநகரில் கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மீது பாலியல் ரீதியான வன்கொடுமை சம்பவம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாநகருக்கு உட்பட்ட நான்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பதிவான வழக்கு தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மதுரை மாநகரில் கடந்த 2020ஆம் ஆண்டு 132 வழக்குகளும், 2021ஆம் ஆண்டு 124 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 150 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த 34 மாதங்களில் மொத்தம் 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்காக மதுரை மாநகர காவல் துறை சார்பாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையைத் தடுப்பது குறித்து தொடர்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த ஐந்திற்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா.. பெண் குழந்தைகளுக்கு எதிரான‌ பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
மதுரையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா.. பெண் குழந்தைகளுக்கு எதிரான‌ பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

மேலும் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள், குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'போன் எடுக்க இவ்வளவு நேரமா?' என கேட்ட தாய் - மனமுடைந்த மகள் தூக்கிட்டுத் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.