ETV Bharat / state

’மகாவீரர் சிற்பம்... ராஜராஜ சோழன் கல்வெட்டுகள்’ - வரலாற்றின் எச்சங்கள் பொதிந்த கல்லுப்பட்டி! - Raja Raja Solan Inscription script

மதுரை: ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம், ராஜராஜ சோழன் கல்வெட்டுகள் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பொருள்கள் கல்லுப்பட்டி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வரலாற்றின் எச்சங்கள் பொதிந்த கல்லுப்பட்டி!

author img

By

Published : Aug 5, 2020, 2:53 PM IST

கீழடி அகழாய்வு பணியின் மூலம் தமிழர்களின் தொன்மையான வரலாற்று சிறப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் சமீபகாலமாக பல்வேறு தொல்லியல் எச்சங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே காரைக்கேணி பகுதியில் உள்ள செங்கமேடு எனும் இடத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் பழமையான சத்திரம் ஒன்றை கண்டறிந்தனர்.

இந்தப் பகுதியின் மேற்பரப்பை முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு அரியவகையான பொருள்கள் கண்டறிப்பட்டுள்ளன. இந்த சத்திரத்தின் சுவர்களிலும், அருகில் உள்ள கிணற்றின் சுவர்களிலும் ராஜராஜசோழனின் கல்வெட்டுகள், பழங்கால தமிழ் எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பழமையான தமிழ் எழுத்துக்கள் மற்றும் 8 வட்டெழுத்து துண்டு கல்வெட்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 8 வட்டெழுத்து துண்டுக் கல்வெட்டுகள் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற விருது பெயருடன் தொடங்கும் முதலாம் ராஜராஜ சோழனின் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

மேலும், ஒரு தூணில் உள்ள கல்வெட்டுகளில் "அரஹா" எனத் தொடங்கும் சொல் காணப்படுகிறது. தூணின் அடிப்பகுதி மறைந்துள்ள சூழலில் அரஹா என்பதை சமஸ்கிருதத்தில் உள்ள அருகன் எனக் கொண்டால் இந்த பகுதி சமணப்பள்ளியாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 24ஆவது சமணத் தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிற்பம் மூன்றடி உயரம் இரண்டு அகலத்தில் மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தின் மேல் சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளதாகவும், இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். குறிப்பாக இருபுறமும் இயக்கிகள் மட்டுமே பல இடங்களில் காணப்பட்டுள்ள சூழலில் இயக்கர்களுடன் உள்ள சிறப்பு வாய்ந்த சிற்பமாக கருதப்படுகிறது.

வரலாற்றின் எச்சங்கள் பொதிந்த கல்லுப்பட்டி!

இந்த பகுதியில் ஒரு சமணப்பள்ளி இருந்தற்கான கட்டடங்களின் செங்கல் குவியல்களும், மக்கள் வாழ்விடப்பகுதியாக இருந்ததற்கான ஆதாரங்களாக பானை ஓடுகள் பலவடிவிலான கலை வண்ணங்களுடன் சிதறி கிடக்கின்றன. மேலும் கல்செக்கு, கோயில் கல் என பல்வேறு எச்சங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொண்டு வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என வரலாற்று அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கங்கைகொண்டான் அருகே கிடைத்த மட்பாண்ட ஓடுகள்..அகழ்வாராய்ச்சி செய்ய மக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.