ETV Bharat / state

டெல்லி CM தமிழ்நாட்டின் CM-க்கு எழுதிய கடிதம் - முதலமைச்சர் ஸ்டாலினின் ரியாக்‌ஷன் இதுதான்! - Aravind kejriwal

இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறித்தும் நாட்டின் புகழ்பெற்ற அரசியலமைப்பின் ஒவ்வொரு கோட்பாடும் சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறித்தும் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு, முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.

TN CM MK stalin writes a letter to aravind kejriwal

author img

By

Published : Apr 16, 2023, 1:00 PM IST

Updated : Apr 16, 2023, 1:23 PM IST

சென்னை: டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். நமது நாட்டின் நலன் கருதி மிக முக்கிய விவகாரம் குறித்து தனக்கு எழுதிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவில் ஜனநாயகம் ஒவ்வொரு நாளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே என்றும், நமது புகழ்பெற்ற அரசியலமைப்பின் ஒவ்வொரு கோட்பாடும் முக்கியமாக, சுதந்திரம், சமத்துவம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம் என அனைத்தும் சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களையும் உள்ளடக்கிய நமது கூட்டாட்சி அமைப்பானது அனைத்து அதிகாரங்களையும் சட்டத்துக்குப் புறம்பாக மையப்படுத்த முயலும் சக்திகளால் பெரும் ஆபத்தில் உள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, ' காலனி ஆட்சியில் இருந்து நாம் சுதந்திரம் அடைந்தபோது, பிரிதல் குறித்த விஷயங்கள் எழுந்த போதிலும், நமது கூட்டாட்சி அரசியல் மற்றும் இந்திய அரசியல் அமைப்பில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக ஓர் ஒன்றிணைந்த தேசமாகவும் ஒருங்கிணைந்த சமூகமாகவும் உருவாகியுள்ளோம். எனினும், இந்தக் கோட்பாடுகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது.

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள்/துணைநிலை ஆளுநர்கள் அம்மாநிலச் சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களை அல்லது டெல்லி அரசால் அனுப்பப்படும் கோப்புகளை எவ்வித ஒப்புதலும் அளிக்காமல் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமல்ல, ஐனநாயகத்தின் உச்சமான மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்’ என்று தனது கடிதத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டியுள்ளார்.

'டெல்லி சட்டமன்றத்தின் ஜனநாயக நடைமுறையில் துணைநிலை ஆளுநர் தொடர்ச்சியாகத் தலையிடுவது, டெல்லியின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்வதைத் தடுப்பது, இன்னும் ஒரு படி மேலே சென்று அன்றாட நிர்வாகச் செயல்பாட்டை ஸ்தம்பிக்கச் செய்தல் போன்றவற்றால் டெல்லியில் நாங்கள் எதிர்கொள்ளும் நிலைமை மிகவும் மோசமானது. டெல்லி தேசியத் தலைநகர் ஆட்சிப் பகுதிச் சட்டத்தில், 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தால் டெல்லி மாநில அரசு நிலைகுலைந்துள்ளது.

மருத்துவம், கல்வி, நீர், மின்சாரம், தொழில்கள், நிதி அல்லது உள்கட்டமைப்பு என டெல்லி அரசு பெரும் முன்னேற்றம் அடைய முயலும் அனைத்துத் துறைகளிலும், துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் அதற்குத் தடையாக உள்ளது

மாநில அரசுகள் மற்றும் அவற்றின் ஆளுநர்கள் / துணைநிலை ஆளுநர்கள் என்னும் இடைமுகம் ஒரு போர்க்களமாக ஆக்கப்பட்டு ஒன்றிய அரசால் சத்தமின்றி ஒரு போர் நிகழ்த்தப்பட்டு வரும் சூழ்நிலையில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்கள்/துணைநிலை ஆளுநர்கள் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு, அவற்றின் நிர்வாகத்தைத் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப தடுக்கிறார்கள்.

அவர்கள் ஒன்றிய மற்றும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இடையே அதிகரித்து வரும் பிளவின் அடையாளமாக மாறிவிட்டனர். கூட்டாட்சிக் கூட்டுறவு எனும் கோட்பாட்டை மாநில அரசுகள் மிகவும் மதிக்கின்ற போதிலும், அதற்கு (ஒன்றிய அரசால்) சொல்லளவிலேயே மதிப்பளிக்கபடுகிறது. இதனால் கெடுவாய்ப்பாக, ஆளுநர்/துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் பொறுப்பு பற்றிய கேள்விகளை மக்கள் எழுப்பும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், எந்தவொரு அரசியலமைப்புச் சட்டப் பதவி வகிப்பவரும் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று எண்ணக் கூடாது. இந்தியா சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படுகிறது என்பதையும், அது ஒன்றிய அரசு மற்றம் அதன் பிரதிநிதிகளின் ஆணையால் நிர்வகிக்கப்படவில்லை என்பதையும் நாம் உறுதியாக முன்னிலைப்படுத்த வேண்டிய தகுந்த நேரம் இதுவாகும்' என்றும் தனது கடிதத்தில் டெல்லி முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய அதிகாரத்தை மையப்படுத்தும் போக்குகளுக்கு எதிராக உறுதியான தங்கள் நிலைப்பாட்டை எடுத்தியம்பும் வகையில், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி, ஒன்றிய அரசையும் இந்தியக் குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தைத் தாம் பாராட்டுவதாகவும், அதே வழியில், ஆளுநர்கள் / துணைநிலை ஆளுநர்கள் தங்களின் அரசியல் சாசனப் பணிகளை மேற்கொள்ள காலக்கெடுவை நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இதுபோன்றதொரு தீர்மானத்தை வரும் கூட்டத்தொடரில் டெல்லி சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்வேன்.

மாநில/தேசிய தலைநகரப் பகுதி அரசுகளை சிறுமைப்படுத்த நினைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் கூட்டாக எதிர்க்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளதுடன் தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 'நன்றி அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களே, TNLA-வின் தீர்மானத்தை பாராட்டி எங்கள் குழுவில் இணைந்ததற்காக.

உண்மையில், எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டமன்றத்தின் இறையாண்மையே உச்சமானது. எந்த 'நியமிக்கப்பட்ட' ஆளுநரும் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' அரசாங்கங்களின் சட்டமன்ற அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொலைநோக்கு சிந்தனை, அர்ப்பணிப்பில் பிரதமர் மோடிக்கு ஈடு இணையில்லை - அமெரிக்க அமைச்சர்

Last Updated : Apr 16, 2023, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.