மதுரை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆயுர் வேதா, யுனானி, ஹோமியோபதி, மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் ஆங்கில மருத்துவ மேற்படிப்பு பயின்று அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.
மத்திய அரசின் இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் இன்று (டிச. 11) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா தொற்று காலத்தில் இதுபோன்ற மருத்துவர்களின் அறிவிப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, இவர்களது போராட்டத்திற்குத் தடைவிதிக்கக்கோரி வழக்கறிஞர்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை மனுவாகத் தாக்கல்செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆயுஷ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு தெரிவித்து நாளை சிகிச்சையை தவிர்க்கும் இந்திய மருத்துவர் சங்கம்!