ETV Bharat / state

கிண்ணிமங்கலம் தமிழிக் கல்வெட்டு கிமு 2 - 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது - தமிழக தொல்லியல் துறை - தமிழ்நாடு தொல்லியல் துறை

மதுரை: மதுரை அருகே உள்ள கிண்ணிமங்கலம் மடத்தின் தமிழிக் கல்வெட்டு கிமு 2 முதல் கிமு 1ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் என தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

கிண்ணிமங்கலம் தமிழிக் கல்வெட்டு
கிண்ணிமங்கலம் தமிழிக் கல்வெட்டு
author img

By

Published : Sep 2, 2020, 6:00 PM IST

தமிழ்நாட்டில் சில இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகள் தமிழின் தொன்மைக்கு நியாயம் சேர்க்கும். மதுரை மாநகரில் இருக்கும் ஏராளமான இடங்களே அதற்குச் சான்று. திருப்பரங்குன்றம், அழகர்மலை, கீழவளவு, முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தற்போது அந்த வரிசையில் கிண்ணிமங்கலம் கிராமமும் இணைந்துள்ளது. பார்ப்பதற்கே அரிதான தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்தூணை நமக்கு அருளி, தனக்கும் தமிழ் மொழிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையை வழங்கியிருக்கிறது அக்கிராமம்.

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே உள்ளது கிண்ணிமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பள்ளிப்படை கோயில் ஒன்று கிண்ணி மடம் என அழைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இங்கு கட்டுமான பணியின்போது தமிழி எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டு, வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் தற்கால தமிழ் கல்வெட்டு ஆகியவை ஒருசேர கண்டுபிடிக்கப்பட்டன. இச்செய்தி தமிழ்நாடு தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஆகஸ்ட் 19ஆம் தேதி தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கமும், ராஜேந்திரனும் இணைந்து செயலாற்றிய குழு அதிகாரப்பூர்வ ஆய்வை மேற்கொண்டது. இதை அடிப்படையாக கொண்டு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் நேற்று (செப்.,1) வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழிக் கல்வெட்டு ஒன்றும் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் ஒரே கோயில் வளாகத்தில் கண்டறியப்பட்டன.

'எகன் ஆதன் கோட்டம்' என்று தமிழில் ஒரு எண்பட்டைத் தூணில் பொறிக்கப்பட்டிருக்கிறது. எ, ன், ட், ம் என்னும் நான்கு எழுத்துகளில் புள்ளி வைக்கப்பட்டுள்ளன. எழுத்து அமைதியைக் கொண்டு இக்கல்வெட்டின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிமு 1ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இக்கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் இருக்கிறது.

அடுத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில் 'இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்' என உள்ளது. இதை கிபி 7 முதல் கிபி 8ஆம் நூற்றாண்டு கல்வெட்டு என கொள்ளலாம். வட்டெழுத்துக் கல்வெட்டில் 'பள்ளிப்படை' என்ற சொல் முதன் முதலில் பயின்று வருவதை காணலாம். இதுவே தமிழ்நாட்டின் முதல் பள்ளிப்படை என்பதும் அதுவும் பாண்டியநாட்டில் மதுரைக்கு அருகிலேயே கட்டப்பட்டது என்றும் இதிலிருந்து உறுதிப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, அக்கோயில் வளாகத்தில் கல்வெட்டுகள் கிடைத்து வருகின்றன. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை கடந்த ஆகஸ்ட்19ஆம் தேதி மேற்கொண்ட ஆய்வில் கிபி 1722ஆம் ஆண்டைச் சேர்ந்த விசயரங்க சொக்கநாதன் கால கல்வெட்டு ஒன்று புதிதாகக் கிடைத்தது. கிட்டத்தட்ட 43 வரிகளைக் கொண்ட இக்கல்வெட்டிலும் பள்ளிப்படை சமாதிகள் என்ற சொல்லாட்சி இடம்பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தாருக்கு உரிமையுடைய மடமாகவும் பள்ளிப்படை கோயிலாகவும் இது உள்ளது.

கிபி 7 முதல் 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டில் முதன்முதலில் பள்ளிப்படை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதே போன்று கிபி பதினெட்டாம் நூற்றாண்டின் விசயரங்க சொக்கநாதன் கல்வெட்டிலும் பள்ளிப்படை சமாதி குறித்த குறிப்புகளும் கிடைக்கின்றன. இக்கோயிலில் உள்ள 1942ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டும் இக்கோயில் ஜீவ சமாதி என்றே அழைக்கப்பட்டுள்ளதை காண்கிறோம்.

தற்போது வரை இக்கோயில் பள்ளிப்படை கோயிலாகவே திகழ்கிறது. எனவே பள்ளிப்படை என்ற சொல் நீத்தோர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னத்தை குறிக்கிறது. கிண்ணிமங்கலம் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் கோட்டம் என்ற சொல்லாட்சி முதன்முதலாக பயன்பாட்டில் காணப்படுகிறது. மேற்கூறப்பட்டுள்ள கல்வெட்டுச் சான்றுகளின் வாயிலாக தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட தூணானது நீத்தோர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத் தூணாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

கிண்ணிமங்கலம் தமிழிக் கல்வெட்டு

இக்கல்வெட்டுக்கு கூடுதல் வலு சேர்ப்பதற்கான முதன்மைச் சான்றுகள் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் கிடைக்கும் வரை இந்தத் தூணானது நீத்தாருக்கு எடுக்கப்பட்ட நினைவுத் தூணாகவே கருத்தப்படும் கருதலாம் எனவும் தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'தமிழி' எழுத்து வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை; 'மா' மதுரையில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.