கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு, இந்திய ரயில்வே இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள 'அனகோண்டா' சரக்கு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
சரக்குகளை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு விரைவாக கொண்டு செல்லும் வகையில், இந்த ரயில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ரயில் 3 சரக்கு ரயில்களை ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 2 கி.மீ நீளத்திற்கு இணைத்துள்ளது. 177 வேகன்கள், 3 இன்ஜின்கள், 3 பிரேக் ஆகியவற்றைக் கொண்டு, எந்த வித கேபிள் இணைப்புகளும் இல்லாமல் முன்பக்க இன்ஜினில் ரேடியோ அலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரயில் இயக்கப்படுகிறது. மணிக்கு சுமார் 80 கி.மீ., வேகத்தில் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க... தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக சார்பில் 'பிரியாணி' விருந்து!