நேற்று துபாயிலிருந்து கோரண்டல் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக 155 பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் அவர்களை விமான நிலையத்திலேயே வரிசைப்படுத்திஇரண்டாம் கண்காணிப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தொடர்பில் முதற்கட்ட சோதனைசெய்யப்பட்டது. பின்னர் அவர்களிடம் வைரஸ் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து வருகிற ஏப்ரல் 17ஆம் தேதிவரையில் மக்கள் கூடும் இடங்களில், அரசுப் பேருந்துகளில் பயணிப்பது தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதன் பின்னர், தனிமைப்படுத்தலுக்கான சீலிட்டு அவர்களை வீட்டிற்கு அனுப்பியிருந்தனர். இந்தப் பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் நேரில் ஆய்வுசெய்தார்.
இதன்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “துபாயிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த 155 பயணிகள் கரோனா பரிசோதனைக்குள்படுத்தப்பட்டு தொற்று அறிகுறி இல்லாததால் 105 பயணிகள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
50 வயதுக்கு மேற்பட்ட ஐந்து பயணிகள் மட்டும் தற்போது சுகாதாரத் துறை மருத்துவ முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். வயது மூப்பு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை கேட்டறிந்து, அதன்படி அவர்களைத் தனித்தனியாகச் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும், மற்றவர்களுக்குச் சோதனை முடிவு அடைந்ததைக் குறிக்கும் வண்ணம் அவர்கள் கையில் அழியாத மை கொண்டு முத்திரை இடப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
இந்தச் சோதனையின்போது மதுரை முதன்மைச் சுகாதாரத் துறை அலுவலர் பிரியாராஜ், திருப்பரங்குன்றம் சுகாதாரத் துறை அலுவலர் தங்கபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : சென்னை வந்த 56 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கோவிட்-19 அறிகுறி