மதுரை மாவட்டம், தேனூர் கிராமம் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப் பழமையான ஊர்களில் ஒன்றாகும். மிக விமரிசையாக நடைபெறும் சித்திரைத் திருவிழாவானது தேனூர் கிராம மக்கள், மதுரைக்கு கொடுத்த கொடையாகும். சங்க இலக்கியங்களில் பெயர் பெற்று விளங்கும் இந்த ஊர், ஆன்மிகப் பெருமை கொண்டுள்ளது.
வைகை ஆற்றில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்போது சம்பிரதாயத்திற்காக இன்றைக்கும் தேனூரில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். முதுமக்கள் தாழிகளும், பல்வேறு சிலைகளும் தேனூரில் அவ்வப்போது கிடைத்த வண்ணம் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில் இன்று தேனூர் கிராமத்தில் அமைந்துள்ள மேட்டு புஞ்சை தெரு பகுதியில், உள்ள ஒரு பழமையான கோயிலை ஒட்டி, முத்து பிள்ளை என்பவருக்குச் சொந்தமான இடத்தில் மல்லிகை பூச்செடி நடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டது. அப்போது குழியிலிருந்து 3 அடி உயரமுள்ள அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தேனூரைச் சேர்ந்த சுழியம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி கார்த்திகை குமரன் கூறுகையில், 'திருமலை மன்னரின் காலத்திற்கு முன்பாக தேனூரில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் அழகரும், குருவித்துறை வல்லப பெருமாளும் சந்திக்கும் நிகழ்வு தேனூர் பெருமாள் மண்டகப்படியில் நடைபெற்றது. இந்த இடத்தில் பெருமாள் கோயில் இருந்ததாக இரண்டு கல்வெட்டுகள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் கண்டறியப்பட்டு, மதுரை திருமலை நாயக்கர் மகாலில் வைக்கப்பட்டுள்ளன. கோச்சடை மாறன் என்ற மன்னன் ஆட்சியில், பெருமாள் கோயிலில் நந்தா விளக்கு எரிக்க, இவ்வூரைச் சேர்ந்த வேளாண் அரையன் 50 பசுக்களை தானமாக கொடுத்தார் என்ற செய்தியும், அரையந் திருவரங்கி என்பவர் 50 ஆடுகளை தானமாக வழங்கினார் என்ற செய்தியும் அக்கல்வெட்டில் அறிய முடிகிறது. சுழியம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி கார்த்திகை குமரன் இத்தகைய சிறப்புமிக்க தேனூரில் வைகையின் வடகரையில் மேட்டு புஞ்சைத் தெருவில், இடிந்த நிலையில் ஒரு கோயில் உள்ளது. இதைத் தான் ‘பெருமாள் கோயில்' என்கின்றனர். தற்போது கருவறை மண்டபம் மட்டுமே அங்கு எஞ்சியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலில் இருந்த மூலவர் சிலையை நாகதீர்த்தம் என்ற இடத்திற்கு அருகேயுள்ள பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்று வைத்து விட்டனர். மதுரையில் தற்போது நடக்கும் சித்திரைத் திருவிழாவின்போது, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நடக்கும் அனைத்து வைபவங்களும், அப்போது தேனூர் பெருமாள் கோயிலிலும் நடந்தது.இடிந்த நிலையில் காணப்படும் பெருமாள் கோயில் அப்பெருமாள் கோயில் இருந்ததாகக் கூறப்படும் இடத்திற்குச் சற்று அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் தான், இன்று இந்த அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது' என்றார்.குழி தோண்டியபோது அம்மன் சிலை கண்டெடுப்பு இதையடுத்து, தேனூர் கிராம நிர்வாக அலுவலர் துரைபாண்டியன் அச்சிலையைக் கைப்பற்றி மதுரை வடக்கு வட்டார அலுவலகத்திலுள்ள வட்டாட்சியர் செல்வராஜின் பார்வைக்கு அனுப்பி வைத்தார்.இதையும் படிங்க: அனுமதியின்றி வைக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் சிலை: அகற்றக்கோரி வருவாய்த் துறை உத்தரவு!