ETV Bharat / state

மதுரைக்கு வரக்கூடிய அனைத்துப் பேருந்துகளையும் மாவட்ட எல்லையில் நிறுத்த உத்தரவு! - Madurai Collector Vinay

மதுரை: முழு ஊரடங்கு காரணமாக மதுரை நகருக்குள் வரக்கூடிய அனைத்துப் பேருந்துகளையும் மாவட்ட எல்லையிலேயே நிறுத்துமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியாளர் வினய்
ஆட்சியாளர் வினய்
author img

By

Published : Jun 24, 2020, 7:10 AM IST

மதுரை மாவட்டத்தில் மாநகர எல்லைப் பகுதி கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு 24ஆம் தேதி அதிகாலை முதல் 30ஆம் தேதி நள்ளிரவுவரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் முழுமையாகப் பொதுப் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுள்ளது

சாத்தூர், சிவகாசி, ராஜபாளையத்திலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள், திருமங்கலம் வரை மட்டுமே இயக்கப்படும். அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள், காரியாபட்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள், அனைத்தும் திருப்புவனம் வரை மட்டுமே இயக்கப்படும். சிவகங்கை மார்க்கத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் பேருந்துகள், அனைத்தும் பூவந்தி வரை மட்டுமே இயக்கப்படும்.

சிங்கம்புணரி கொட்டாம்பட்டி, திருப்பத்தூர் மார்க்கத்திலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள், மேலூர் வரை மட்டுமே இயக்கப்படும். நத்தம் பகுதியிலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளும், கடவூர் வரை மட்டுமே இயக்கப்படும்

திண்டுக்கல்லிலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள், வாடிப்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். தேனி உசிலம்பட்டி வழியாக மதுரை மார்க்கமாய் இயக்கப்படும் பேருந்துகள், செக்கானூரணி வரை மட்டுமே இயக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் ஐஜியின் சொத்துகளை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.