ETV Bharat / state

டாஸ்மாக் அலுவலரின் உதவியுடன் கடத்தப்பட்ட மது பாட்டில்கள் - 7 பேர் கைது! - Alcohol Bottles Trafficking

மதுரை: திருமங்கலம் அருகே கப்பலூர் மதுபான குடோனிலிருந்து டாஸ்மாக் உயர் அலுவலரின் உதவியுடன் மது பாட்டில்களை கடத்த முயற்சித்த 7 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

alcohol-bottles-trafficking-from-warehouse-in-madurai

author img

By

Published : Apr 16, 2020, 12:39 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மது கிடைக்காததால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. மதுபானக் கடைகளில் களவு போவதும் வழக்கமாகியுள்ளன. இதனால் மதுபானக் கடைகளில் உள்ள மது பாட்டில்கள் அனைத்தும் அந்தந்த நகரங்களில் இருக்கும் குடோனுக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் மதுரை திருமங்கலம் அருகே கப்பலூரில் டாஸ்மாக் உயர் அலுவலரின் உதவியுடன் மதுபானக் கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் என 7 பேர் சேர்ந்து குடோனிலிருந்த மதுபாட்டில்களை கடத்த முயன்றுள்ளனர். இந்தத் தகவல் மதுவிலக்கு காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து, மது பாட்டில்கள் கடத்த முயன்றவர்களை கையும் களவுமாக கைது செய்தனர்.

உயர் அதிகாரியின் உதவியுடன் கடத்தப்பட்ட மது பாட்டில்கள்

இவர்களிடமிருந்து 72 உயர் ரக மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்கள் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஜீவானந்தம், விற்பனையாளர்கள் சிவபாண்டி, ரவி உள்பட ஏழு பேரையும் திருமங்கலம் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபானக் கடைகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறும் நிலையில், உயர் அலுவலர்கள் உதவியுடன் குடோனில் மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மலையில் ரகசியமாகக் கள்ளச்சாராயம்... ட்ரோன் மூலம் டிராக் செய்த காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.