மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கலை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு திருவிழாக்கள் அரசு விதித்துள்ள கரோனா நோய்த் தொற்றுக்கான கட்டுப்பாடுகளுடன் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி உழவர் திருநாள் அன்று நடைபெறுவதாக இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் ஜனவரி 17ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, "பங்கேற்க வருகின்ற ஜல்லிக்கட்டு காளைகள், வீரர்கள் தங்களது பெயர்களை இணையம் வழியாக இன்று மாலை 3 மணியிலிருந்து நாளை மாலை 5 மணி வரை madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.
இந்தப் போட்டிகளில் பார்வையாளர்களாக உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க முடியும், வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை. மற்றபடி இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு