மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், " தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக செயல்படுகிறது. ஊரடங்கு காலங்களில்கூட விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமே தடையின்றி நடைபெற்றது.
விசுவாசத்துடன் உழைக்கும் தொண்டர்களுக்கு வாய்ப்பு உண்டு என்பதுதான் அதிமுகவின் எண்ணம். சாமானியர்கள் சரித்திரம் படைக்கலாம் என்பது தான் அதிமுகவின் பலம்.
இதை பலவீனமாக நினைப்பது எதிர் அணியினரின் தவறு. சென்ற 40 ஆண்டுகள் பொதுசேவையாற்றும் மோடி, எடப்பாடி பழனிசாமிக்கு எனது பாராட்டுகள். அதிமுக கூட்டணி குறித்து பொன். ராதாகிருஷ்ணனுக்கு பதில் சொல்ல தேவையில்லை.
தமிழ்மொழி உரிமைக்காக முதலில் குரல் கொடுப்பது அதிமுகதான். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மட்டும் தான் தமிழுக்ககாக மாநாடு நடத்தியவர்கள்.
மற்றவர்கள் எதற்காக மாநாடு நடத்தினார்கள் என்பது தெரியும். மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இந்தியாவின் முன்னோடியாக உருவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கரோனாவை எதிர்கொள்ள அரசு தயார். பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'இந்தியாவில் முதல்முறையாக தொலைக்காட்சி மூலம் கல்வி அளிப்பது தமிழ்நாடுதான்'