ETV Bharat / state

அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் முதலமைச்சராக முடியும். திமுகவில் முடியுமா? : செல்லூர் ராஜூ கேள்வி! - மதுரை மாவட்ட அதிமுக

மதுரை: அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் முதலமைச்சராக பதவியேற்க முடியும். ஆனால் திமுகவில் முடியுமா என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

Sellu Raju questions to DMK
Sellu Raju questions to DMK
author img

By

Published : Aug 22, 2020, 8:21 PM IST

Updated : Aug 22, 2020, 9:52 PM IST

மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது போல் அடுத்த 100 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத ஆளும் கட்சியாக அதிமுகவே திகழும்.

நான்கு திரைப்படங்கள் ஓடி விட்டாலே தன்னை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று கூறிக்கொள்கிறார்கள். இன்று எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து காணாமல் போய்விட்டார்கள். ஆனால் மக்கள் சொல்லி கட்சி ஆரம்பித்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். மட்டும் தான். திராவிட இயக்கங்கள் இருந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும்.

அடிமட்ட தொண்டனும் முதலமைச்சராக முடியும்!

தமிழர்களின் பெருமை உலகளவில் தெரிய வேண்டுமானால் திராவிட இயக்கங்கள் மிக மிக அவசியம். அதிமுகவில் அடிமட்ட தொண்டனாக இருக்கும் ஒருவர் முதலமைச்சராக முடியும். ஆனால் திமுகவில் கருணாநிதி குடும்ப வாரிசுகள் மட்டுமே உயர் பதவியை அடைய முடியும். திமுகவின் வளர்ச்சிக்கு ஆலோசனை சொல்ல வடநாட்டில் இருந்து ஒருவரை கூட்டிவந்து அவர்கள் கட்சியை வளர்க்கிறார்கள்.

ஆனால் அதிமுகவிற்கு மக்கள் மட்டுமே என்றும் ஆலோசகர்கள் என பேசினார்.

இதையும் படிங்க: யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா, இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா?'

Last Updated : Aug 22, 2020, 9:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.