மதுரை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் மாநகர காவல் துறைக்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிநவீன தெர்மல் ட்ரோன் கேமரா வழங்கப்பட்டது.
இரவு நேரத்தில் கண்காணிக்கும் சிறப்பம்சம் கொண்ட இந்த ட்ரோன் கேமராவை மதுரை மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் ராஜ் சத்யன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ் சத்யன், "வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஐந்து முதல் எட்டு விழுக்காடு கூடுதல் வாக்குகளைப் பெறுவதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு முக்கியப் பங்கு வகிக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... வன்னியர் இடஒதுக்கீடு: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பாமகவினர்