ETV Bharat / state

காவலர் தேர்வில் வெற்றிபெற்றும் பணிக்கு செல்ல முடியாத இளைஞர் - The case did not get a job

மதுரை: காவல் நிலையத்தில் முறையாக வழக்கை முடிக்காததால் காவலர் தேர்வில் வெற்றிபெற்றும் வேலையில் சேரமுடியவில்லை எனக்கூறி இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் தனது அனைத்து சான்றிதழ்களையும் அளித்துள்ளார்.

வழக்கை முடிக்காமல் இழுத்தடித்ததால் வாழ்க்கையை இழந்து விட்டதாக இளைஞர் வேதனை
author img

By

Published : Nov 19, 2019, 12:06 AM IST

மதுரை பேரையூர் பகுதியைச் சேர்ந்த சங்கரமணி என்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர். இவர், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் உடற்தகுதித் தேர்வில் தேர்வு எழுதினார். தேர்வில் வெற்றி பெற்றும் அவர் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் கூறி பணி ஆணையை காவலர் தேர்வாணையம் நிராகரித்துவிட்டது.

இதனால் வாழ்க்கையை இழந்த இளைஞர் சான்றிதழ்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துவிட்டு தனக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துச்சென்றார்.

இதுகுறித்து இளைஞர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'நான் 12ஆம் வகுப்பு படிக்கும்போது போடப்பட்ட பொய் வழக்கு இரண்டை காவல்துறையினர் சரியாக பதிவு செய்யவில்லை. இதனால் தற்போது நான் காவலர் தேர்வில் வெற்றிபெற்றும் வேலையில் சேரமுடியவில்லை' என்றார்.

சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த இளைஞர் சங்கரமணி

மேலும், 'வழக்கு குறித்து காவல் நிலையத்தில் விசாரித்தபோது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இட மாற்றம் செய்துவிட்டனர் எனக் காவலர்கள் தெரிவித்துவிட்டனர்' என அவர் வருத்தத்தோடு தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவலர் பணிக்கான தகுதி தேர்வில் பரிதாபம்- மூர்ச்சையாகி இளைஞர் உயிரிழப்பு

Intro:*முறையாக வழக்குகளை முடிக்காத இருந்த காவலர்களில் நடவடிக்கையால் வாழ்க்கை இழந்தவர்*

Visual in mojoBody:*முறையாக வழக்குகளை முடிக்காத இருந்த காவலர்களில் நடவடிக்கையால் வாழ்க்கை இழந்தவர்*

மதுரை பேரையூர் பகுதியைச் சேர்ந்த சங்கரமணி என்பவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் அவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் உடற்தகுதி தேர்வில் தேர்வு பெற்றுது. இந்நிலையில் வேலை கிடைக்க உள்ள நிலையில் அவர் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் கூறி அவரது பணி ஆணையை நிராகரித்தது காவலர் தேர்வாணையம்.

சீரார் வழக்கில் 2 வழக்கு முறையாக பதிவு செய்யாமல் விட்டதால் தொடர்ந்து நிலுவையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை பதிவு செய்த ஆய்வாளரிடம் விசாரித்தபோது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இட மாற்றம் செய்ததை அடுத்து முறையான தகவல் கிடைக்காமல் தற்போது வேலை இழந்து நிலைஉள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அதற்கான ஒப்புகை கிடைக்கப் பெற்ற நிலையில், தற்போது இது குறித்து எந்தவித நடவடிக்கை இல்லாததால் அனைத்து சான்றுகளையும் தற்போது மாவட்ட ஆட்சியர் இடத்தில் அளித்துள்ளார்.

மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைசேர்ந்தவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் நிராகரிக்கப் படுவதால் மன உளைச்சல் ஏற்பட்டு வருகிறது உடனடியாக இதற்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

Visual in mojoConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.