ETV Bharat / state

மதுரையில் விறுவிறுப்பாய் விற்பனையாகும் பிரதமர் மோடி பொம்மை! - Madurai District important News

மதுரையில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் சுமார் 2 அடி உயரமுள்ள மோடி பொம்மை விறுவிறுப்புடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரையில் விறுவிறுப்பாய் விற்பனையாகும் மோடி பொம்மை

author img

By

Published : Dec 15, 2022, 10:35 PM IST

மதுரையில் விறுவிறுப்பாய் விற்பனையாகும் பிரதமர் மோடி பொம்மை!

மதுரை: திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக் கடையில் சுமார் 2 அடி உயரமுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொம்மை ரூ.1,554க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி அணியும் கோட் மற்றும் ஆடைகள் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில் தற்போது அவரது உருவ பொம்மை குழந்தைகளையும், பொதுமக்களையும் வெகுவாக ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

பார்பி கேர்ள், புர்கா அணிந்த இஸ்லாமியப் பெண், ராணுவ வீரர் போன்ற பொம்மைகள் அக்கடையில் விற்கப்படும் நிலையில் மூன்று விதமான தலைப்பாகையுடன் கூடிய மோடியின் உருவ பொம்மைகள் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே வரவேற்பு பெற்று விற்பனையாகி வருவதாக கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி..!' - இ.யூ.முஸ்லீம் லீக் தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.