மதுரை பாலமேடு அருகே முடுவார்பட்டியைச் சேர்ந்த கரோனா நோயாளி ஒருவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (மே.24) திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
சேவை நிர்வாகம் சார்பில் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நோயாளி கிராமத்தில் இருந்து சரக்கு ஆட்டோவில் ஏற்றப்பட்டு, முப்பது கிலோமீட்டர் தூரம் பயணித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் அவர் கரோனோ சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே கரோனா சிகிச்சை தொடர்பாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை, நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காமை உள்ளிட்டப் பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. தற்போது ஆம்புலன்ஸ் காலதாமதத்தால் உயிரிழப்பு ஏற்படும் அவல நிலையும் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : 'ரஜினியை விட ரூ.1 லட்சம் அதிகம் கொடுத்த ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி'