மதுரை: நத்தம் சாலை திருப்பாவை காயத்ரி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்பட ஏழு பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த குடும்பத்துடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை அலுவலர்கல் முடிவு செய்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மதுரை மாநகராட்சியால் அறிவித்துள்ளது. அந்தப் பகுதி முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அங்கிருந்து எவரும் வெளியேறவும், வெளியிலிருந்து எவரும் உள்ளே வருவதுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல், கிருமி நாசினி தெளித்தல் என அனைத்து பணிகளையும் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 892 பேர் மீது வழக்குப்பதிவு!